நாளுமொரு இறைவார்த்தை

இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று ஆம் ஆண்டு ஆம் நாள் . இறைமகன் இயேசு, இன்று உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் நீங்கள் வாழும் நாட்டினையும் ஆசீர்வதிப்பாராக.

இன்றைய சிந்தனை

முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 20ஆம் வாரம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை
2014-08-22''வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்'' (லூக்கா 1:28)

அன்னை மரியாவை இயேசுவின் தாய் எனப் போற்றுகின்ற திருச்சபை அதே அன்னையைக் ''கடவுளின் தாய்'' எனவும் வாழ்த்திப் புகழ்கின்றது. கடவுளுக்கு நாம் அளிக்கின்ற ஆராதனையை நாம் மரியாவுக்கு வழங்குவதில்லை. ஏனென்றால் மரியா கடவுளின் படைப்பு. கடவுளுக்கு நிகரான நிலை அவருக்குக் கிடையாது. ஆனால் கடவுளின் திருமகனாகிய இயேசுவை அந்த அன்னை இந்த உலகிற்குப் பெற்றுத் தந்தார். எனவே, அவருக்குச் சிறப்பு மரியாதை செலுத்துவது பொருத்தமே என திருச்சபை கற்பிக்கிறது. வானதூதர் கபிரியேல் மரியாவுக்குத் தோன்றுகிறார். ''அருள்மிகப் பெற்றவரே''...


மாதாந்த  விவிலிய அறிவுத்தேடல் போட்டி - 2014 ஆகஸ்ட்


ஈராக் கிறிஸ்தவர்களுக்கென கத்தோலிக்க அமைப்புகளின் நிதியுதவிஈராக்கில் தங்கள் பூர்வீக இடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் நோக்கில் 25,000 பவுண்டுகளை வழங்கியுள்ளது இங்கிலாந்தின் கத்தோலிக்க உதவி அமைப்பான CAFOD. சிரியாவிலிருந்து வெளியேறி வட ஈராக்கில் அடைக்கலம் தேடியுள்ள அகதிகளிடையேயும், லெபனனில்... [2014-08-19 09:44:19]


ஈராக்கிலுள்ள எண்ணெய்க் கிணறுகளைக் காப்பதே அமெரிக்க ஐக்கிய நாட்டின் நோக்கம் - முதுபெரும் தந்தை சாக்கோஈராக்கிலுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தலைமை இடங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நோக்கம், குர்திஸ்தான் தலைநகரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே எனத் தெரிவதாக, தன் கவலையை வெளியிட்டுள்ளார், பாக்தாத் முதுபெரும் தந்தை... [2014-08-19 09:42:33]


பெரும்பான்மை மதத்தவரும் சிறுபான்மை மதத்தவரும் ஒன்றிணைந்து வாழ்ந்த பெருங்கொடையை இழந்து நிற்பது பாவம்ஈராக்கில் துன்புறும் மக்கள் மத்தியில் சென்று அவர்களின் துன்பங்களோடு பங்கெடுக்க விரும்பும் திருத்தந்தை, தன் பிரதிநிதியாக அப்பகுதிக்கு தன்னை அனுப்பியுள்ளதாக இஞ்ஞாயிறன்று திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்ததையொட்டி பத்திரிகையாளர்களிடம் கூறினார் கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி. ஈராக்கின்... [2014-08-19 09:42:33]

2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன்! பாப்பாண்டவர் ஆரூடம்நான் இன்னும் சில காலம் மட்டுமே அதாவது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன். அதுவரை மட்டுமே கடவுள் எனக்கு ஆயுள் வழங்கியுள்ளார். இவ்வாறு பாப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 77... [2014-08-19 14:48:42]


முப்பெரும் விழாவில் செங்கலடி பங்குத்திருச்சபைமட்டக்களப்பு மறைமாவட்ட நிர்வாகத்தின்கீழ் அமைந்துள்ள செங்கலடி, தூய நிக்கொலஸ் தேவாலய திருச்சபையானது, தேவாலயம் ஆரம்பிக்கப்பட்ட 87வது ஆண்டினையும் (1927-2014), தேவாலயம் கட்டியதன் 50வது ஆண்டினையும் (1963-2014), தனிப்பங்காக உருவானதன் 30ம் ஆண்டினையும் (1984-2014) 17.08.2014... [2014-08-19 14:40:38]

பெருகி வரும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து டெல்லி பேராயர் கவலைவட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாதப் பிரச்சனைகள் அதிகரித்துவருவது குறித்தும் நாட்டின் தலைநகரிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கிறிஸ்தவர்களும், திருஅவைச் சொத்துக்களும் தாக்கப்பட்டு வருவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளார் டெல்லி பேராயர் அனில் கூட்டோ. ஹரியானா... [2014-08-10 20:34:45]


வடக்கன் குளம் திருக்குடும்ப ஆலய திருவிழாஆகஸ்ட் 6 முதல் 15 வரை திருக்குடும்ப ஆலய திருவிழா நடைபெறவுள்ளது. கடந்த 6 வருடமாக அன்னையின் திருவிழா நிகழ்வுகளை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பியது போல இந்த வருடமும் நேரடி ஒளிபரப்பு நடைபெறும். இவ்வழிபாடுகளில்... [2014-08-06 21:24:55]

கேள்ன் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர் நியமனம்பேர்லின் உயர்மறைமாவட்டப் பேராயர் கருதினால் றைனெ மரியா வொல்கி (Kardinal Rainer Maria Woelki) அவர்களை கேள்ன் உயர்மறைமாவட்டப் பேராயராக திருத்தந்தை பிரான்சிஸ் இன்று (11.07.2014) நியமனம் செய்துள்ளார். இந்த அறிவித்தலை வத்திக்கானில் வெளியிட்ட... [2014-07-12 00:00:00]

விடுதலைத்தாய் அன்னைமரியாகானாவில் நடந்த திருமணத்திற்கு அன்னைமரியா சென்றிருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அழைப்புப்பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே, அன்னைமரியா இயேசுவை நோக்கி, திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றார். [2014-08-04 20:54:23]

எழுத்துருவாக்கம்:அருள்சகோதரி சர்மிளா ரோசரி பிரியா FSAGஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
என் வாழ்வுக்கான ஆதாரம் என்ன?
பாகம் -ஏழுநான் வாழ்வில் எதை நோக்கி தினமும் அயராது ஓடிக்கொண்டிருக்கிறேன்? நாம் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு காரணங்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவள் நம்பிக்கையை விமர்சிப்பவர்களும் தினமும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். குழந்தையாய் இருந்த போது உள்ளத்தில் ஏற்படும் சிறு சிறு ஆசைகளையெல்லாம் தீர்த்து கொள்ள ஓடிக்கொண்டே இருக்கின்றோம் [2014-07-21 22:10:00]

எழுத்துருவாக்கம்:அருட்பணி.ஜான் சவரி சார்லஸ் OCD

Life of Abraham Lincoln - Archbishop Fulton Sheen


2014-08-22

கத்தோலிக்க திருச்சபையில் பல நாடுகளில் பல காலபகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புகள், திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், மறையுரைகள், எனைய வழிபாடுகள் சம்மந்தமான காணொளித் தொகுப்புகள் இங்கே பிரசுரமாகும். ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையாக; உங்கள் ஆசீர்வாதத்திற்காகத் தொகுக்கப்படுகின்றது.

அன்புள்ள அப்பா


2014-08-22

வேதாகமத்தினை சித்தரிக்கும் திரைப்படங்கள், புனிதர்களின் வரலாறுகள், திருச்சபையின் வரலாற்றை மையப்படுத்திய திரைக்கதைகள், சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் திரைப்படங்கள், குறும்படங்கள், நல்வழிகாட்டும் கிறிஸ்தவ திரைப்படங்கள் இங்கே பிரசுரமாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திரைப்படமாக; ஆண்டவர் இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மகிமைக்காக; உங்கள் ஆன்மீக நலங்களுக்காக தொகுக்கப்படுகின்றது.
பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 6 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம், எமது பணியகத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

02 ஆகஸ்டு 2014 நாளின் அன்னை மரியாவின் செய்தி

அன்புப் பிள்ளைகளே!
நான் என்றும் உங்களோடு இருக்கிறேன்; நன்மை என்றும் வெல்லவேண்டும். அதற்காகவே உங்களோடு இருக்கிறேன். நன்மைத்தனம் என்ற அந்த இலக்கை அடைய இப்போது உங்களால் இயலாமல் போகலாம். என் மகன் இயேசு குழந்தை பருவத்தில் என்னோடு வளரும்போது எனக்கு சொன்னதை சில நேரங்களில் புரிந்துகொள்ள இயலாமல் போனதுபோலவே, இப்போதும் உங்களால் பலவற்றை புரிந்துகொள்ள இயலாது. இருப்பினும் நான் என் மகன் இயேசுவை விசுவசித்தேன், அவரை பின்பற்றினேன். நான்...
ஜூலை 25, 2014 அன்று அன்னை மரியாவின் செய்தி

அன்புப் பிள்ளைகளே!
கடவுளின் அருளால் நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கவில்லை. இந்நேரத்தில் ஆண்டவர் மனமாற உங்களுக்கு அறிகுறி தருகிறார். கடவுளிடம் திரும்புங்கள். கடவுளிடம் மன்றாடுங்கள். செபத்தின் மூலம் கடவுளிடம் இணையுங்கள். செபம் உங்கள் இதயங்களை ஆட்சி செய்வதாக! உங்கள் குடும்பங்களை, குழுமங்களை ஆட்சி செய்வதாக! ஏனெனில் செபத்தின் வாயிலாக தூய ஆவியானவர் உங்களை வழிநடத்துவார். கடவுளின் விருப்பத்தை, திட்டத்தை தூய ஆவியானவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். நான் என்றும்...
2014-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இங்கு ஒன்றுகூடியிருக்கும் உங்களின் அன்னையாகிய நான், அனைத்துலகின் தாய், உங்களுக்கு அன்னையின் ஆசீரை வழங்குவதுடன் பணிவான வழிகளில் செல்லுமாறு உங்களை அழைக்கின்றேன். இந்தப் பாதையே எனது மகனின் அன்பை அறிந்துகொள்வதற்கு வழிசமைக்கும். எனது மகன் அனைத்து அதிகாரமும் கொண்டவர், அவரே அனைத்துமாக உள்ளார். எனது பிள்ளைகளே, நீங்கள் இதைத் தெரிந்து கொள்ளாது விட்டால், உங்கள் ஆன்மாவை இருளே ஆட்சிசெய்யும். பணிவாக வாழ்தல் மட்டுமே உங்களை குணமாக்க முடியும்....ஞாயிறு திருப்பலிக்குரிய வாசகங்கள்

2014-08-24

தரவிறக்கம்(Download)

முன்னுரை, மன்றாட்டு


வாசகங்களுடன் முன்னுரை, மன்றாட்டு

திருவெளிப்பாட்டு ஆண்டு 2013/2014

01/12/2013-29/11/2014


மின்னஞ்சல் குழுமம்

ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை கீழே பதிவு செய்யவும்.

உங்கள் Email முகவரி

ETR வானொலியில் யேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் வானொலி நிகழ்வு

தினமும் காலை 7:45மணி முதல் 8:05 மணி வரை

இவ் நாளந்த நற்சிந்தனை எமது இணையத்தில் நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரை உங்கள் ஆசீர்வாத்ததிற்காக ஒலிபரப்பாகின்றது. கேட்டு பயனடையுங்கள், மற்றவர்களுக்கும் அறிவியுங்கள்.


வாழ்த்து செய்திகள்


இயக்குனர்

அருட்பணி.அ.பெ.பெனற்

மேலும் ...

ஆலோசகர்

அருட்பணி.அல்பேர்ட் கொலன்

மேலும் ...

பயனடைந்தோர்

counts
தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடை யெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். (திருத்தூதர் பணி 1:8) உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள். (மாற்கு 16:15)

புனித கன்னி மரியாள்

இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்
(யோவான் 2:5)

இறைவாக்குத்தத்தம்

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
(யோவான் 16:20)

இறைசித்தம்

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்.(பிலிப்பியர் 2:10)

திருத்தந்தை

பிரான்சிஸ்

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்
(மத்தேயு 16:18)

பரிசுத்த ஆவி

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்: உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்: உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்
(யோவேல் 2:28)

பரிசுத்த ஆவி

ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு-இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.
(எசாயா 11:2)

இறைவாக்குத்தத்தம்

எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்: என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
(நீதிமொழிகள் 8:17)

நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்: நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்: நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்:
அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம்.
(எசாயா 53:5)

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.
(யோவான் 3:16)