மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 124
வேதாகமப் பகுதி : ரூத் 2: 4-22
முடிவுத் திகதி : 2024-04-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)
திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.



1. போவாசு எங்கிருந்து அங்கு வந்து சேர்ந்தார்?

மோவாபு நாட்டிலிருந்து
எருசலேவில் இருந்து
பெத்லேகேமில் இருந்து
நகுமி நாட்டில் இருந்து
மாரா நாட்டில் இருந்து

2. போவாசு அறுவடைக்காரருக்கு கூறிய வாழ்த்து என்ன?

நிறைவுடன் எங்கிருந்து சென்றேன்
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
உங்கள் தெய்வம் வாழட்டும்
ஆண்டவர் உங்களை தண்டிக்க மாட்டார்
சீயோன் மலையில் சென்று வாழுங்கள்

3. போவாசு கூறிய வாழ்த்துக்கு மக்கள் கூறிய பதில் என்ன?

நீர் வந்த வழியே திரும்பி ப் போம்
உமக்கு இங்கே வேலை இல்லை
உமக்கு ஆசி வழங்குவார்
ஆண்டவர் எங்களை வறுமையாய் திரும்பி வரச் செய்தார்
ஐந்து நீர் நிறைவோடு வாழும்

4. மோவாபியப் பெண் குறித்து மேற்பார்வையாளர் கூறியது என்ன?

இவள் மோவா நாட்டை சேர்ந்த மோவாபியப்பெண்
இவள் நகோமியுடன் வந்திருக்கும் மோவாமியப் பெண்
சிந்தும் கதிர்களைப் பொறுக்கிக் கொள்ள அனுமதி கேட்டாள்
காலை முதல் ஓய்வு இல்லாமல் கதிர்களை பொறுக்கிக் கொண்டிருக்கின்றாள்
பந்தல் நிழலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறாள்

5. போவாசு ரூத்துக்குக் கூறியது என்ன?

பெண்ணே நான் சொல்வதை கேள்
இந்த வயலை தவிர வேறு எந்த வயலுக்கும் சென்று கதிர் பொறுக்க வேண்டாம்
என் வயலில் வேலை செய்யும் பெண்களுடன் இங்கேயே இரு
கதிர் பொறுக்கும் பெண்களுடன் நீயும் இரு
உனக்கு தாகம் எடுத்தால் அவர்கள் வைத்திருக்கும் பாத்திரங்களில் இருந்து தண்ணீர் அருந்திக் கொள்

6. போவாசு கூறியதைக் கேட்ட ரூத் என்ன செய்தாள்?

ரூத் போவாசின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்
என்னை ஏன் இவ்வாறு கருணை கண் கொண்டு நோக்குகின்றீர் என்று கேட்டாள்
அயல்நாட்டு பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகின்றீர்
ஏன் என்னைத் துன்புறுத்துகின்றீர் என்று கேட்டாள்
என்னையும் இறந்து போகச் சொல்கின்றீரா?

7. போவாசு ரூத் பற்றி என்ன அறிந்திருந்தார்?

அவள் கணவன் இறந்து விட்டான்
அவள் தனது மாமியாருக்காகச் செய்துள்ளதை அறிந்திருந்தார்
தந்தை தாய் சொந்த நாட்டை விட்டு முன் பின் தெரியாத இனத்தருடன் வாழ வந்திருக்கிறார்
வந்த இவள் இந்த நாட்டின் தலைவர்களைக் கொலை செய்ய சதி செய்கிறாள்
அவள் தனியே வந்தாள்


8. போவாசு ரூத்துக்கு அளித்த பதில் என்ன?

நீ செய்துள்ள அனைத்திற்கும் ஆண்டவர் தகுந்த பதில் அளிப்பார்
ஆண்டவரின் இறக்கைகளின் அரவணைப்பை நீ தேடி வந்திருக்கிறாய்
உன்னை நம்ப மாட்டேன்
நீ எங்களோடு இருக்க வேண்டாம்
ஆண்டவர் உனக்கு முழு நிறைவான பலனை தருவார்

9. உணவு வேளையின் போது போவாசு ரூத்தடம் கூறியது என்ன?

இங்கே வந்து அப்பத்தை எடு
புளித்த ரசத்தில் தோய்த்துச் சாப்பிடு
இங்கிருக்கும் ரசத்தில் மிளகு சேர்ந்து உள்ளது
அப்பளம் மிகவும் பெரியதாக உள்ளது
உணவை நீ வீட்டுக்கு கட்டிச் செல்

10. போவாசு உணவாக என்ன கொடுத்தார்?

அப்பத் துண்டு
புளித்த திராட்சை இரசம்
வறுத்தப்பயறு
மிளகாய் பொரியல்
எள் உருண்டை


11. ரூத் கதிர் பொறுக்குவதற்கு உதவியாக அறுவடை ஆட்களிடம் போவாசு கூறியது என்ன?

அரிகட்டுகள் கிடக்குமிடத்தில் அவள் கதிர் பொறுக்கட்டும்
அவளை அதட்ட வேண்டாம்
கட்டுகளிலிருந்து சில கதிர்களை உருவிப் போட்டு விடுங்கள்
அவள் பொறுக்கிக் கொள்ளட்டும்
அவளை தடுக்க வேண்டாம்


12. கதிர் பொறுக்கச் சென்ற ரூத் என்ன செய்தார்?

ரூத் மாலை வரை கதிர் பொறுக்கிச் சேர்த்தார்
அவற்றை தட்டிப் படைத்தார்
அது ஏறத்தாழ 20 படி இருந்தது
அவர் அதை ஊருக்குள் எடுத்துச் சென்றார்
அவர் அதை மாமியாரிடம் காட்டினார்


13. மாமியார் ரூத்ததிடம் கேட்டதும் அவள் கூறியதும் என்ன?

இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினீர்
அது யாருடைய வயல்
உனக்கு பரிவு காட்டியவருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவாராக
நான் எந்த வயதில் கதிர் பொறுக்கினாலும் கதிர் கொண்டு வந்து தானே உள்ளேன்
கதிர் பொறுக்கியது நான்தான் அவருக்கு ஆசி கூறுகிறீர்கள்


14. ருத்தும் மாமியாருக்கும் இடையே கதிர் பொறுக்கியது பற்றிய உரையாடல் என்ன?

நான் கதிர் பொறுக்கிய வயல் உரிமையாளர் பெயர் போவாசு என்றார்
நகோமி அவரிடம் வாழ்வோருக்கும் பிறந்தவருக்கும் பேரன்பு காட்டும் ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்குவாராக
போவாசு நமக்கு நெருங்கிய உறவினர்
அவர் நம்மைக் காப்பாற்றும் உறவினருள் ஒருவர்
அவருக்கும் நமக்கும் எந்த உறவு தொடர்பும் இல்லை என நகோமி கூறினார்


15. ரூத் போவாசு தனக்கு என்ன கூறினார் என நகோமியிடம் கூறினார்?

அறுவடை முடியும் வரை தம்முடைய ஆட்களுடன் கதிர் பொறுக்கலாம் என போவாசு கூறியதாகச் சொன்னார்
தனது வயலுக்கு வர வேண்டாம் எனக் கூறினார்
கதிர் பொறுக்க வரும்போது அவருக்கான உணவை அவரே கொண்டுவர வேண்டும் எனக் கூறினார்
அங்குள்ள பணிப்பெண்கள் உடன் அவர் தங்கக் கூடாது எனக் கூறினார்
இரு தினங்கள் தான் அங்கு நிற்கலாம் என கூறினார்


நீங்கள் கீழே குறிப்பிடும் முகவரிக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்

First Name:
Last Name:
E-mail:
Address :

City Code :
City :
Country: