இறைவார்த்தை

தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். (கலாத்தியர் 5:22-23)

இறைவார்த்தை

நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்
(மத்தேயு 16:18-19)



அருட்தந்தை அல்பேர்ட் கொலன் அவர்களின் ஆசிச்செய்தி

Zum Start des Internetauftritts des katholischen tamilischen Seelsorgeamtes möchte ich sehr herzlich gratulieren. . Ich freue mich sehr, dass die Gemeinde jetzt auch über Internet erreichbar ist.
தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகமானது இணையதளமொன்றினை ஆரம்பிப்பதனை மிகவும் மனதார வாழ்த்துகின்றேன். யேர்மன் வாழ் தமிழ் கத்தோலிக்க மக்களை இணையமுலமாகவும் தொடர்பு கொள்ளகூடியதாக இருப்பதினை முன்னிட்டு பெருமகிழ்வு அடைகிறேன். தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழுகின்ற மக்கள் மத்தியிலும், குறிப்பாக இளம் பிராயத்தினர் இணையத்தளத்தினையே பிரதான தொடர்பாடல் சாதனமாக பயன்படுத்துகின்றனர். இதனால் இங்கு வாழுகின்ற கத்தோலிக்க மக்களினாலும் இம் முயற்சி விரும்பி வரவேற்கப்ப்டும். இன்னும் பல மக்கள் கத்தோலிக்க திருச்சபையின் மீதும், கத்தோலிக்க மக்கள் மீதும் கவனம் செலுத்துவர்.

இணையத்தள பாவனையானது இன்றைய உலகில் பொது நடைமுறையாக இருப்பதால், கத்தோலிக்கராகிய நாங்களும் இணையதளத்தினை பாவிப்பது முக்கியமானது. துரதிர்ஸ்டவசமாக அநேக சமயப்பிரிவுகளும் இன்னும் குறிப்பாக மிகச்சிறிய குழுக்களும் தம்மை விளம்பரப்படுத்தும் ஓர் சாதனமாக இணையத்தளத்தினை பயன்படுத்துகின்றனர். கத்தோலிக்கராகிய நாம் அவர்களை பிரதிசெய்ய வேண்டிய தேவை எமக்கு இல்லை. எனினும் எமது கத்தோலிக்க விசுவாசத்தினையும், கத்தோலிக்க நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு உள்ளது. அப்போது தான் இயேசு எமக்கு தந்த பணியாகிய; “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத்தேயு 28:19) இனை நிறைவேற்ற முடியும்.
Nur so können wir den Auftrag Jesu an seine Kirche und an uns erfüllen: „… Darum geht zu allen Völkern und macht alle Menschen zu meinen Jüngern… (Mt 28,19)

கத்தோலிக்கராகிய நாம் எதிலும் பிந்தங்கி இருக்க வேண்டியதில்லை. பதிலாக இந்த இணையதளமானது இன்னும் பலரை அறிந்து கொள்ளவும், வேறு இணையத்தளங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி கொள்ளவும், கதோலிக்கர்களை பற்றி அறிந்து கொள்ளவும், கத்தோலிக்க விசுவாசத்தினை வளர்த்து கொள்ளவும் உதவும் என நம்புகின்றோம். எல்லா வற்றுக்கும் மேலாக, எமது இளம் தலமுறையினர் இதனால் கவரப்பட்டு, அவர்களது விசுவாசம் அதிகரிக்கும் என நம்முகின்றோம்.

மேலும், இத்தளமானது இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபையினைப் பற்றியும் அவர்களுடைய பணிகளை பற்றியும் விபரிப்பதற்கு ஆன்மீக பணித்தளத்திக்கு ஓரு கருவியாக அமையும். இன்னும் யேர்மன் மக்கள், இலங்கைத் தமிழ் மக்களைப்பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வைத்துள்ளனர். எனவே இத் தளமானது தமிழ் மக்களுடைய பின்ன்னியையும் அவர்களைப்பற்றிய விபரங்களையும் இங்கு வாழும் மக்கள் அறிந்து கொள்ள உதவ வேண்டும் .

இவ் இணையதளமானது நல்லபடியே ஆரம்பிக்க இறைஆசிர் கூறி உங்களை வாழ்த்துகின்றேன்.
Ich wünsche der Website einen guten Start, ein gutes Gelingen und Gottes Segen!

அல்பேர்ட் கொலன்
பங்குத்தந்தை
கிறிபீல்ட்