பெல்யியம் பெனு அன்னையின் திருவிழா
14-05-2016


நெதர்லாந்து ஆன்மீகப்பணியகம் ஆண்டு தோறும் நடாத்தும் பெனு அன்னையின் திருத்தல திருவிழா இவ்வாண்டு 14.05.2016 அன்று நடைபெறவுள்ளது. 13.05.2016 அன்று மாலை 19.00மணிக்கு மாலைத் திருப்பலியுடன் ஆரம்பமாகும் வழிபாட்டு நிரலில், 14.05.2016 அன்று காலை 10.00 மணிக்கு அருட்பணி.போல் றொபின்சனின் நெறிப்படுத்தலில், ஒப்பரவு - குணமளிக்கும் நற்கருணை சிறப்பு வழிபாடும்,அதே நாள் மாலை 16.00 மணிக்கு திருயாத்திரை திருவிழா திருப்பலியும் நடைபெறும்.



வழிபாட்டு நிரல்

திகதி நேரம் வழிபாடு
13-05-2016 19.00 திருப்பலி
14-05-2016 10.00 ஒப்புரவு. குணமளிக்கும் நற்கருணை சிறப்பு வழிபாடு
14-05-2016 13.30 திருப்பவனி - அன்னைமரியா காட்சி கொடுத்த சிற்றாலயம் - நீரூற்று தரிசிப்பு
14-05-2016 16.00 திருயாத்திரை திருநாள் திருப்பலி

ஆலயமுகவரி

Rue de l'Esplanade, 57
B- 4141 - Banneux N.-D. (Sprimont)
Belgium


உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள் (லூக்கா: 6:36)

அன்னை மரியாள் இறைவனின் பார்வையில் பேறுபெற்றவர். பெண்களுக்குள் ஆசீர் பெற்று நமக்கா உலக மீட்பரை ஈந்தவர். இரக்கம் நிறைந்த இறைவனுடைய வேண்டுதலுக்கு ஆம் என்று பதிலுரைத்து, உன்னத இறைவனுடைய வல்லமையால் அவர் நிழலிட்டபோது 'அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்" என்று இறைவனைப் புகழ்ந்து பாடுகிறார். அவருடைய புகழ்ச்சி பாடலின் வழியாக அவர் நமக்கு கூறுவது, இறைவன் பேரன்புமிக்கவர், ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர். இரக்கமும் பரிவும் அருளும் நிறைந்தவர் என்று. ஆம் அன்னை மரியாள் தன்னுடைய வாழ்வில் இறைவனை சுமந்து அவரைப்போலவே இரக்கமுள்ளத் தாயாக வாழ்ந்து இன்றும் என்றும் நமக்காக பரிந்து பேசுபவராக திகழ்கின்றார். கானாவில் நடைபெற்ற திருமணவிழாவின் போது மனிதனுடைய தேவைக்காக தனது அன்பு மகனிடம் பரிந்து பேசி அவர்களுடையத் தேவைகளை நிறைவு செய்வதுடன், அந்நிகழ்வின் வேளையில் மனுக்குலம் முழுவதும் வாழ்வின் நெறியை பின்பற்ற வேண்டுமென்று வாழ்வுக்கு ஈட்டுச் செல்லும் ஓர் உன்னத உண்மையை எடுத்துரைக்கின்றார். அது என்னெவென்றால் 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்பது. மனுக்குலத்தின் தேவைகளை உணர்ந்த அன்னைமரியாள் 1933 ஆம் ஆண்டு மரியற் என்னும்; சிறுமிக்கு எட்டுமுறை காட்சி தந்து நம்மை 'ஏழைகளின் கன்னிகை" என்று தன்னை வெளிப்படுத்தினார்; மேலும் சிறப்பாக நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் ஜுபிலி ஆண்டில் இறைவனுடைய நேசத்தையும் இரக்கத்தையும் ஆழமாக பெறவும், நாம் பெற்றக்கொண்ட இறைஅனுபவத்தை மற்ற உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் அழைக்கின்றார் எனவே இரக்கத்தின் ஆண்டினை அருள்நிறைந்த ஆண்டாக கொண்டாடி மகிழ்விக்க 'மன்னிப்பில் புது வாழ்வு" என்ற மையக்கருத்தில் திருயாத்திரை எடுக்க இருக்கின்றோம். இரக்கதின் தாயாகவும், ஏழைகளின் தாயாகவும் விளங்கும் நம்முடைய பாசமிகு அன்னையின் ஆசீரை நிறைவாகப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.



ACCESS TO BANNEUX

By car :
Via the motorway "Les Ardennes" (E25). Exit 45 SPRIMONT
Via the motorway Liège-Aachen (E40), intersection Battice with the motorway Spa-Verviers (E42) exit 5 PEPINSTER



By train and bus :

Leaving from Liège : 

Ligne 64 LIEGE - BANNEUX (travel duration : 50 mn)

Leaving from   LIÈGE Opéra ( next to the theatre)
Weekdays 07.35 10.10 11.40 13.10 14.50 16.50 17.30 18.50
Saturdays 07.40 10.10 11.40 13.10 14.50 16.50 17.30 18.50
Sundays and feast days 08.40* 10.10 11.40* 13.10 14.40* 16.10 17.40* 19.10 20.40*
* from May 1st to September 30th only
Leaving from LIÈGE - Guillemins Station
Weekdays 07.45 10.20 11.50 13.20 15.00 17.00 17.40 19.00
Saturdays 07.48 10.18 11.48 13.18 14.58 16.58 17.38 18.58
Sundays and feast days 08.48* 10.18 11.48* 13.18 14.48* 16.18 17.48* 19.18 20.48*
* from May 1st to September 30th only
Leaving from BANNEUX
Weekdays 06.36 08.39 10.39 12.09 13.49 15.07 16.47 18.12
Saturdays 06.44 08.42 10.42 12.12 13.52 15.13 16.33 18.13
Sundays and feast days 07.25* 08.55 10.25* 11.55 13.25* 14.55 16.25* 17.55 19.26* 
* from May 1st to September 30th only