திருவழிப்பாட்டு ஆண்டு C (19-05-2013)

என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு 
அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் 
உங்களுக்கு நினைவூட்டுவார்./> என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு 
அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் 
உங்களுக்கு நினைவூட்டுவார்./> என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு 
அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் 
உங்களுக்கு நினைவூட்டுவார்./> என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு 
அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் 
உங்களுக்கு நினைவூட்டுவார்./> என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு 
அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் 
உங்களுக்கு நினைவூட்டுவார்./> என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு 
அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் 
உங்களுக்கு நினைவூட்டுவார்./> என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு 
அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் 
உங்களுக்கு நினைவூட்டுவார்./>


திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே, சிறார்களே, இளைய உள்ளங்களே, சகோதர சகோதிரியரே! நம்மை தாங்கியிருக்கின்ற திருச்சபையின் பிறப்பு விழாவை கொண்டாட ஒரே சமூகமாக நாம் கூடி வந்திருக்கின்றோம். இன்று தூய ஆவியாரின் விழாவைக் கொண்டாடுகின்றோம். எல்லோருக்கும் தூய ஆவிப் பெருவிழா நல்வாழ்த்துகள்!

உயிரற்ற மனநிலையோடு உடைந்துபோன கனவுகளோடு இருந்த அன்பு திருத்தூதர்கள் தூய ஆவியினால் உறுதிபடுத்தப்பட்டு, புதியதிருச்சபையின் புதியபாதையில் தைரியத்தோடு, நம்பிக்கையோடு சென்றதுபோல நம்மில் இருக்கும் பல்வேறு உயிரற்ற நிலைகளை இன்று தூய ஆவியானவர் நெருப்பினால் எரித்து நம்மை உறுதிபடுத்தி புதுப்பிப்பாராக. மரணத்தை, தூய ஆவியின் ஆற்றலைப் பெற்றவர்களாய் கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?" என வியந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2;1-11

1 பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். 2 திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. 3 மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். 4 அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். 5 அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். 6 அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். 7 எல்லோரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? 8 அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?" என வியந்தனர். 9 பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், 10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், 11 யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! "என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.
திருப்பாடல்கள் 104;1,24,29-31,34

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பல்லவி

24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! ப+வுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. பல்லவி

29 நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். பல்லவி

30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! பல்லவி

34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.

இரண்டாம் வாசகம்

அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே
1கொரிந்தியர் 12;3-7,12-13

3 கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பேசும் எவரும் "இயேசு சபிக்கப்பட்டவர்" எனச் சொல்ல மாட்டார். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டடவரன்றி வேறு எவரும் "இயேசுவே ஆண்டவர்" எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 4 அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. 5 திருத் தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. 6 செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். 7 பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. 12 உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். 13 ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20;19-23

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்.

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்பே உருவான இறைவா,

திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர, தேவையான ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அளிக்குமாறு, எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது அன்பில் வழிநடத்த வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

எங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருகின்றவரும்: நீர் கூறிய அனைத்தையும் எங்களுக்கு நினைவூட்டுகின்றவருமான தூய ஆவியாராம் துணையாரை எங்களுக்குத் தரும் நல்ல தந்தையே!

உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் நீர் கற்றுத்தரும் அனைத்தையும் முழுமையாகக் கடைப்பிடித்து, தூய ஆவியாரின் அசைவுகளுக்கு இசைந்து கொடுத்து, அவர் அருளும் புதியதும், புனிதமானதுமான இயல்புகளை அணிந்து கொண்டு வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வளிப்பவராம் இறைவா,

இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பின் பிறப்பிடமே இறைவா,

எம் இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரும், இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கொடுத்தது போன்ற ஆற்றலையும், சக்தியையும் பெற்று தாம் வாழும் சமுதாயத்திற்கு நன்மை செய்கின்றவர்களாகவும், உமது நற்செய்தியின் தூதுவர்களாகவும் செயற்படும் சக்தியை அளித்துக் காத்திட வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வேதனைகளோடும், விரக்தியோடும், கண்ணீரோடும் வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்பு தூய்மையானதாகவும், நிலையானதாகவும் இருக்கவும், அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.

எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குகின்ற தந்தையே இறைவா!

உமது பிள்ளைகளாகிய நாங்கள்: தூய ஆவியானவரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அன்பைப் பகிரவும், அன்பைப் பெறவும், இறைவனுடைய கட்டளைகளின்படி வாழவும் வேண்டிய ஞானத்தை அளித்திட வேண்டுமென்று தயவாய் உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்'' (யோவான் 14:26)

இயேசு தம் சீடர்களுக்கு இறுதி அறிவுரை வழங்கும்போது, ''மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு தந்தையிடம் கேட்பேன்'' (யோவா 14:16) என்கிறார். அந்தத் துணையாளர்தாம் தூய ஆவியார். ''துணையாளர்'' என இங்கே குறிப்பிடப்படுகின்ற சொல்லுக்கு இரு பொருள்கள் உண்டு. எபிரேய மரபில் இதற்குத் ''தேற்றுகிறவர்'', ''ஆறுதல் அளிப்பவர்'' என்பது பொருள். இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் ஆறுதல் அளித்தார். அவர்களுடைய துன்பங்களில் அவரே மக்களைத் தேற்றினார். கடவுளின் ஆதரவும் தேற்றுதலும் மக்களுக்கு நிறைவாகக் கிடைத்ததை எசாயா விரிவாக விளக்குகிறார் (காண்க: எசாயா, அதி. 40-55). சிமியோன் இஸ்ரயேலுக்கு அளிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தார் (லூக் 2:25). இயேசு மக்களுக்கு நற்செய்தி அறிவித்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளித்து, ஆறுதல் வழங்கிட வருகின்றார் (லூக் 4:18-19). இயேசுவின் சீடர்கள் அவர் புரிந்த ஆறுதலளிக்கும் பணியைத் தொடர்ந்தார்கள். ''ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய கடவுள்'' தம்முடைய ஆறுதலைத் திருத்தூதர்களின் பணி வழியாக மக்களோடு பகிர்ந்துகொள்கிறார். தூய பவுல் இக்கருத்தை அழகாக விளக்குகிறார் (காண்க: 2 கொரி 1:3-7).

துணையாளர் என்னும் சொல்லுக்கு மற்றொரு பொருள் உரோமைப் பின்னணியிலிருந்து பெறப்படுகிறது. இதற்குப் ''பரிந்துபேசுபவர்'', ''சார்பாக வாதாடுபவர்'', அருகிருந்து ''உதவி செய்பவர்'' என்னும் பொருள் உண்டு. இயேசு இறையாட்சிப் பணியை ஆற்றியபோது தாம் புரிந்த செயல்களுக்குக் கடவுள் சாட்சி என்றார்; திருமுழுக்கு யோவானும் இயேசு பற்றிச் சான்றுபகர்ந்தார்; மறைநூலில் எழுதப்பட்டவையும் இயேசுவுக்குச் சான்றாக அமைந்தன. தம் சீடர்கள் தம் பணியைத் தொடரும்போது அவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் என்பதை இயேசு முன்னறிவித்தார். அவர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்படும்போது அவர்களுக்காகப் பரிந்து பேசத் தூய ஆவி துணையாவார் எனவும் இயேசு அறிவிக்கிறார் (காண்க: மாற் 13:9-13; லூக் 12:11-12). இயேசு தந்தையிடம் நமக்காகப் பரிந்துபேசிப் பெற்றுத் தருகின்ற தூய ஆவி திருச்சபையோடு என்றும் தங்கியிருந்து நமக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். அவர் நம் உள்ளங்களில் எழுப்புகின்ற நல்ல சிந்தனைகள் நம் வாழ்வுக்குத் துணையாகும். கடவுளின் ஆவியே நமக்குச் சார்பாக இருக்கும்போது நாம் எந்தச் சக்திக்கும் அஞ்சவேண்டியதில்லை என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம் தூய ஆவி எந்நாளும் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்துவதை உணர்ந்து நாங்கள் ஆறுதல் அடைந்திட அருள்தாரும்.