யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
பொதுக்காலம் 12வது வாரம் வெள்ளிக்கிழமை
2013-06-28

புனித இரெனுயு


முதல் வாசகம்

"நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய்
தொடக்கநூலில் இருந்து வாசகம் 17;1,9-10,15-22

1 ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இ என்றார்.9 மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், "நீயும் தலைமுறைதோறும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். 10 நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே; உங்களுள் ஒவ்வொரு ஆணும் 15 பின்பு கடவுள் ஆபிரகாமிடம், "உன் மனைவியைச் "சாராய்" என அழைக்காதே. இனிச் "சாரா" என்பதே அவள் பெயர். 16 அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்" "என்றார். 17 ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, "நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். 18 ஆபிரகாம் கடவுளிடம், "உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்" என்றார். 19 கடவுள் அவரிடம்;, "அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ "ஈசாக்கு" எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். 20 இஸ்;மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர்களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும். 21 ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கை நிலைநாட்டுவேன் என்றார். 22 அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்..

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
திருப்பாடல்கள் 128;1-5

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.பல்லவி

5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும் அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8;1-4

1 இயேசு மலையிலிருந்து இறங்கிய பின் பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள். 2 அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார். 3 இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு, "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்று சொன்னார். உடனே அவரது தொழுநோய் நீங்கியது. 4 இயேசு அவரிடம், "இதை எவருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையை;ச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''தொழுநோயாளர் ஒருவர் வந்து இயேசுவைப் பணிந்து, 'ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்றார்'' (மத்தேயு 8:2)

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே தம் பணியாகக் கொண்டிருந்த இயேசு மக்களுக்கு நலமளிப்பதில் கவனம் செலுத்துகிறார். அவரைத் தேடி வருகின்ற தொழுநோயாளர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர். தொழுநோய் என்பது தோல் சம்பந்தமான பல நோய்களைக் குறிக்கலாம். ஒருவருக்குத் தொழுநோய் வந்தது எனத் தெரிந்தால் அவர் சமூகத்திலிருந்தும் தொழுகைக் கூடத்திலிருந்தும் விலக்கி வைக்கப்பட்டார். இப்பிணியால் பாதிக்கப்பட்ட ஒருவர் இயேசுவை அணுகுகிறார். அவருடைய வார்த்தைகளில் தயக்கம் தெரிகிறது. எனவேதான், ''ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்'' என்கிறார். இயேசு அந்த மனிதரின் நம்பிக்கையைப் பார்க்கிறார். அவருக்கு நலமளிக்கிறார். ''திருச்சட்டத்தை நிறைவேற்ற வந்த'' (காண்க: மத் 5:17) இயேசு குணம்பெற்ற தொழுநோயாளரை நோக்கி, ''நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்தும்'' என்று கூறி அனுப்புகிறார் (மத் 8:4). இங்கே இயேசு யூத சட்டத்தை ஏற்று அதற்கேற்ப நடப்பதை நாம் காண்கிறோம். சட்டத்தின் பெயரால் மக்களை ஒடுக்கியவர்களை இயேசு கடிந்துகொண்டார். குறிப்பாக, ஓய்வு நாள், தூய்மைச் சடங்கு போன்றவை சார்ந்த எண்ணிறந்த சட்டங்கள் மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்குச் சுமையானதை இயேசு ஏற்க மறுத்தார்.

நோயிலிருந்து விடுதலை பெற்ற தொழுநோயாளரின் மனநிலையை மத்தேயு விவரிக்கவில்லை. ஆனால் இதே நிகழ்ச்சியை எடுத்துக்கூறுகின்ற மாற்கு நற்செய்தி நலம்பெற்ற தொழுநோயாளர் அச்செய்தியை ''எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார்'' எனக் குறிப்பிடுகிறது (காண்க: மாற் 1:45). எனவே, நலம்பெற்ற அம்மனிதரின் உள்ளத்தில் நன்றி பெருக்கெடுத்து ஓடியதையும் தமக்குப் புதுவாழ்வு வழங்கிய இயேசுவை அவர் புகழ்ந்து போற்றியதையும் நாம் ஒருவாறு ஊகிக்கலாம். கடவுளின் அருள் நம் வாழ்க்கையில் மாற்றம் கொணரும்போது நாம் நன்றியுடைய மனிதராகச் செயல்பட வேண்டும். நன்றியின் ஒரு முக்கிய வெளிப்பாடு கடவுளை நாம் போற்றிப் புகழ்வதில் அடங்கும். நம்மைப் படைத்துக் காத்துப் பேணிவருகின்ற கடவுளை நன்றியோடு நினைத்து அவருக்குப் புகழ்பாடும் விதத்தில் நமது வாழ்வு அமைய வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் எங்களுக்கு நலமளித்துக் காக்கின்ற நற்செயலுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம்.