திருவழிப்பாட்டு ஆண்டு A (01-12-2013)

விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் 
என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் 
என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் 
என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் 
என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் 
என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் 
என உங்களுக்குத் தெரியாது/> விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் 
என உங்களுக்குத் தெரியாது/>


திருப்பலி முன்னுரை

இயேசு பாலகனின் பிறப்பைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட, அவரை இதயத்தில் வரவேற்க இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

இறை இயேசுவில் அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று திருவருகைக்காலம் தொடங்குகிறது. பூ பூக்கும் காலத்தில் தேனீக்கள் மலர்களை நாடிப் பறந்து செல்வதுபோல இறையருள் நமக்காகக் கிறிஸ்துவாய் மலரும் இக்காலத்தைப், பல்வித முன்னேற்பாடுகளோடு, இன்றைய வழிபாடு உணர்த்துவதுபோல எதிர்பார்த்து, புத்துணர்ச்சி மிக்க விழிப்போடு, மிகுந்த ஆர்வமுடன் திருமகனை எதிர்கொள்ள அணியமாவோம்.

திருவருகைக்காலம் தொடங்கும் நாளில்தான் திருவழிபாட்டு ஆண்டும் தொடங்குகிறது என்பதை நாம் உணர வேண்டும். இந்தப் புதிய வழிபாட்டு ஆண்டில் கத்தோலிக்கத் திருச்சபை வழிபாட்டு வாசகங்களின் தொகுப்பில் ஞாயிறு, பெருவிழா நாட்களில் முதலாம் ஆண்டுக்கான வாசகங்களும், வார நாட்களில் இரண்டாம் ஆண்டுக்கான வாசகங்களும் வாசக நூலிலிருந்து தேர்வு செய்யப்படும். திருச்சபையோடு இணைந்து தொடர்ந்து வர இருக்கும் சிறப்பு நாட்களுக்காக நம்மையே அணியமாக்கும் உறுதி ஏற்றவர்களாய் இன்று இத்திருப்பலியில் இணைவோம்.



முதல் வாசகம்

எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்: எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்: மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து ;புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம் ; என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்: எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்: பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்: அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது: அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
திருப்பாடல்கள் 122;1-2,4-9

1 `ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். -பல்லவி

4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். -பல்லவி

6 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக் கொள்ளுங்கள்; உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! 7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!" பல்லவி

8 �உன்னுள் சமாதானம் நிலவுவதாக!'' என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். 9 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். -பல்லவி

இரண்டாம் வாசகம்

இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்:
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்

சகோதர சகோதரிகளே, இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்: உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது. இரவு முடியப்போகிறது: பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்."அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்

அக்காலத்தில், மானிடமகன் வருகையைப் பற்றி இயேசு தம் சீடரை கோக்கிக் கூறியது "நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்: மற்றவர் விட்டு விடப்படுவார்.இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்: மற்றவர் விட்டு விடப்படுவார். விழிப்பாயிருங்கள்: ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்: யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்: நாமும் அவர் நெறிகளில் நடப்போம்;

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

படைப்பின் முதல்வனே இறைவா!

இந்த உலகில் பயனம் செய்யும் திருச்சபை, எம் திருத்தந்தைபிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: மக்களின் நலனில் அக்கரைக் கொண்டு, வாழ்விழந்த மக்களுக்கு அன்பின், இரக்கத்தின், மன்னிப்பின், மற்றும் அமைதியின் கருவிகளாகச் செயல்பட, கிறிஸ்துவின் மீட்பைத் தங்கள் நல்ல செயல்கள் மூலம் பிறருக்கு அறிவிக்கும் வரம் தந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மனமாற்றத்தை விரும்பும் இறைவா!

உம் பிறப்பிற்காகத் காத்திருக்கும் நாங்கள் எங்கள் பழைய இயல்புகளைக் கலைந்து புதிய மனிதர்களாக மாறி இந்த உலகத்தை உம் பாதையில் கொண்டுவர எங்களுக்கு உமது அருளையும் ஆசீரையும் பொழிந்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

எமது விசுவாச வாழ்விற்கெதிராக பல சக்திகள் எம்மைக் குழப்பும் இந்நாட்களில், நாங்கள் ஏமாறாதவாறு எங்கள் விசவாச வாழ்வைக் காத்துக் கொள்ளவும், போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதிருக்கவும்: மன உறுதியோடு இருந்து எங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளவும். வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“நீர் இன்றே என்னோடு பேரின்ப வான் வீட்டில் இருப்பீர்” அன்பு தந்தையே!

இதோ இந்த தருணத்தில் இறந்துபோன ஒவ்வொரு ஆன்மாவிற்காகவும் அதிலும் குறிப்பாக யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். இவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து உம் வான்வீட்டில் உம்மை முகமுகமாக தரிசிக்கும் வரத்தை பொழிந்தருள இறைவா உம்மை பார்த்து மன்றாடுகிறோம்.

உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! என்ற உன்னத வாழ்த்தை எமக்களித்த தந்தையே!

நாங்கள் இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்த்து தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்காது என்றும் விழிப்புடனிருந்து செயல்பட எமக்கு அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் என் மகன் குணமடைவான்” தாயும் தந்தையுமானவரே!

உம் சந்நிதானத்தில் உம் பிள்ளைகளாகிய நாங்கள் பல்வேறு தேவைகள் நிறைவேற வேண்டி நிற்கிறோம் ஆண்டவரே. நாங்கள் எப்போதும் உம் அளவற்ற அன்பை சுவைக்கவும் அதனை பிறருக்கு அளிக்கவும் வேண்டிய தராள மனதை தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

எமது இளைஞர்கள் மனமிரங்கி, அவர்கள் தீமைகளைத் தவிர்த்து ஆன்மீக வாழ்வில் ஆர்வமுள்ளவர்களாக வாழுவதற்கு வேண்டிய அருளை அளித்து, அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.






இன்றைய சிந்தனை

''விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது'' (மத்தேயு 24:42)

மத்தேயு நற்செய்தியில் இறுதிக்காலம் பற்றி வருகின்ற ஒரு பகுதியை இன்று வாசிக்கக் கேட்கிறோம் (மத் 24:37-44). இயேசுவின் இரண்டாம் வருகையை விழிப்போடு எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று இங்கே கிறிஸ்தவ சமூகத்திற்குச் செய்தி வழங்கப்படுகிறது. இதில் மூன்று சிறு உவமைகள் உள்ளன. அவற்றில் மானிட மகன் திடீரென்று, எதிர்பாராத நேரத்தில் வருவார் என்பது வலியுறுத்தப்படுகிறது. முதல் உவமை நோவா பற்றியது. அவருடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் அன்றாட செயல்களைச் செய்வதில் மூழ்கியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதத்தில் பெருவெள்ளம் வந்து அவர்களை அடித்துச்சென்றது.

கிறிஸ்தவ சமூகமும் அன்றாடக் கவலைகளில் மூழ்கியிருந்துவிட்டுத் தங்கள் வாழ்க்கையின் இறுதி நோக்கத்தை மறந்துவிடலாகாது. அவர்களுக்கு வழங்கப்படும் செய்தி: விழிப்பாயிருங்கள்! கிறிஸ்துவை அணிந்துகொண்டு, கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருப்பதே உங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகும் என்பதை மறந்துவிடாதீர்கள்!

திருவருகைக் காலம் "எதிர்நோக்கிக் காத்திருக்கும்" காலம் ஆகும். எபிரேய மக்கள் மெசியாவின் வருகையை எதிர்பார்த்தனர் என்றும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறின எனவும் நாம் அறிவோம். திருவருகைக் காலத்தில் இதை நாம் நினைவுகூர்கின்றோம். நம் வாழ்வு சார்ந்த எதிர்பார்ப்பும் திருவருகைக் காலத்தில் தெரிகிறது. மனிதரிடையே போரும் சண்டை சச்சரவும் மறைந்து அமைதி நிலவும் புதியதொரு காலம் மலரும் என்பது நம் எதிர்பார்ப்பு. கிறிஸ்துவின் வருகையால் இது நிகழும் என்பது நம் நம்பிக்கை. மனித வாழ்விலிருந்து இருள் மறைந்து ஒளி தோன்றும் என்பதும் நம் எதிர்பார்ப்பு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துவின் வருகை உலகில் நிகழ்ந்தது. ஆனால், அவர் வரலாற்றின் இறுதியில் மீண்டும் வருவார். அந்த வருகைக்கு முன்னால் கிறிஸ்து நம் வாழ்விலும் நாம் வாழ்கின்ற சமூகத்தின் வாழ்விலும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக, நாம் கிறிஸ்துவை அருளடையாளக் கொண்டாட்டத்தில் சந்திக்கிறோம். நம்மை அடுத்திருப்போர் வழியாகவும் கிறிஸ்து நம்மைச் சந்திக்க வருகிறார். இவ்வாறு திருவருகைக் காலம் நமக்கு இயேசுவின் வெள்வேறு "வருகைகளை" நினைவுறுத்துகிறது. கிறிஸ்துவை நாம் சந்தித்து, அச்சந்திப்பின் வழியாக நம் வாழ்க்கை வளம் பெறவும், நம் இறுதிச் சந்திப்புக்கு நாம் என்றுமே தயாராக இருக்கவும் இத்திருவருகைக் காலம் நமக்குத் தூண்டுதலாக அமைய வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க அருள்தாரும்.