திருவழிப்பாட்டு ஆண்டு A (02-03-2014)

எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது./> எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது./> எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது./> எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது./>


திருப்பலி முன்னுரை

திருமகன் இயேசுவின் அன்பு நிறை உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் என் இனிய (காலை/மாலை) வணக்கதைக் கூறிக்கொள்கிறேன். இன்று ஆண்டின் பொதுக்கால எட்டாவது வார ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துகள்.

எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள் என நமக்கு உறுதியூட்டும் ஆண்டவரின் சந்நிதானத்தில் நம்பிக்கையோடு ஒன்று கூடியுள்ளோம். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன். உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள், ஏனெனில் நீங்கள் மேலானவர்கள். இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால், உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா? என்றெல்லாம் அவர் நம்மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகின்றார். ஆகவே நாம் அனைவரும்: கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்: எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே: உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே: என் கோட்டையும் அவரே: எனவே நான் சிறிதும் அசைவுறேன் என்றும், செல்வத்துக்குப் பணிவிடை புரியமாட்டோம் கடவுளுக்கு மாத்திரமே; பணிவிடை புரிவோம் என்றும் உறுதியாக முடிவெடுத்து வாழ வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

நான் உன்னை மறக்கவே மாட்டேன்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 14-15

அந்நாள்களில் சீயோனோ, `ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்து விட்டார்; என் தலைவர் என்னை மறந்துவிட்டார்' என்கிறாள். பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்'' என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என் நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு
திருப்பாடல் 62: 1-2. 5-6. 7-8

1 கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே; 2 உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். பல்லவி

5 நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; 6 உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். பல்லவி 7 என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன; என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே. 8யb மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள். பல்லவி

இரண்டாம் வாசகம்

ஆண்டவர் உள்ளத்தின் நோக்கங்களை வெளிப்படுத்துவார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-5

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ! என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக்கொள்ளவும் மாட்டேன். எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறதுஅல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பது மில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்யமாட்டாரா? ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு: ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே:

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது பணியாளர்களாகிய எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள், அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம்: தூய ஆவியின் நிறை வல்லமையால் அவர்களை நிரப்பி, இவர்கள் அனைவரும் உமக்கு மாத்திரமே பணிபுணிய வேண்டிய ஆற்றலை அவர்களுக்கு அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நான் உன்னை மறக்கவே மாட்டேன் என்ற தந்தையே!

உம்மைப் போற்றுகிறோம். இந்த நாளுக்காக, இந்த நேரத்துக்காக நன்றி. இன்றைய நாளில் நீர் எனக்குச் செய்துள்ள அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகிறேன். நாளைய தேவைகளையும், கவலைகளையும் நீரே பொறுப்பேற்றுக்கொள்வீர் என்ற நம்பிக்கையிலும், உமது செயலுக்காக நாம் பொறுமையோடு; மௌனமாய்க் காத்திருந்து, செல்வத்துக்குப் பணிவிடை புரியமாட்டோம் கடவுளுக்கு மாத்திரமே; பணிவிடை புரிவோம் என்று உறுதியாக முடிவெடுத்து வாழ வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என் கற்பாறையும் மீட்புமான தந்தையே!

இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மக்களும் நீர் கொடுக்கின்ற ஆறுதலைப் பெற்றுக் கொள்ளவும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும்வேண்டுமென்று இறைவா உம்மைமன்றாடுகின்றோம்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரான தந்தையே இறைவா!

எமது சிறுவர்களை நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும் சிறந்து வளர்வதற்கு வேண்டிய ஆற்றலையும், அருளையும் அளித்துக் காத்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாதுகாப்பின் நாயகனே!

இன்று கவலை, நோய், துன்பம் போன்றவற்றிலிருந்து விடுதலை பெறத் தவித்துக் கொண்டிருக்கும் அனைத்து மக்கள் மீதும் மனமிரங்கி, அவர்களுக்கு ஆறுதலைக் கொடுத்தும், இயற்கை, செயற்கை அழிவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

சரியான நம்பிக்கை கொள்வோம்

இப் பகுதிகளில் தவிர்க்க வேண்டிய மூன்றைச் சொல்லுகிறார்.

1. மண்ணுலகில் செல்வம் சேர்த்து வைக்க வேண்டாம். 2.கவலை வேண்டாம்.3. தீர்ப்பிட வேண்டாம் என்பன.br>
2.கவலை வேண்டாம்: உண்பதும் உடுத்துவதும் மனிதனின் அடிப்படைத் தேவை. அதைப்பற்றிக் கூட கவலைப்படக் கூடாது என்பது இயேசுவின்போதனை.ஆனால் இன்று நாம் எதைப்பற்றியெல்லாமோ கவலைப்படுகிறோம். பொழுது விடிந்தால் சலிப்பு; பொழுது மங்கினாலும் சலிப்பு.மழை பெய்தாலும் குறை சொல்லுகிறோம், வெயிலடித்தாலும் குறை சொல்லுகிறோம். ஏழையும் கவலைப்படுகிறான்; பணக்காரனும் கவலைப்படுகிறான். எனவே இயேசு சொல்லுவதை ஆழ்ந்து சிந்தித்தால் எதற்காகக் கவலைப்பட வேண்டும் என்பது புலப்படும். br>
நாம் கவலைப்பட வேண்டியது 'அது' இல்லை 'இது' இல்லை என்பதற்காக அல்ல. மாறாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் மட்டுமே கவலைப்பட வேண்டும். முடியாத ஒன்றுக்காக நாம் பல சமயங்களில் கவலைப்படுகிறோம்.காசு பணமோ, கடின உழைப்போ இன்றி நம்மால் எதுவும் முடியாது. இந்த நம்மால் முடியாதவைபற்றிக் கவலைப்படுகிறோம். ஆனால் இலவசமாகக், கொடையாகக், கொடுக்கப்படும் கடவுளின் பராமரிப்பின் மீது நம்பிக்கை இல்லாததுபற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. இந்த இறை நம்பிக்கை குறித்துக் கவலைப்பட்டலால் எல்லாம் குறைவின்றி கிடைக்கும்.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

மன்றாட்டு:

காலத்தை வென்ற காவிய நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். இந்த நாளுக்காக, இந்த நேரத்துக்காக நன்றி. இன்றைய நாளில் நீர் எனக்குச் செய்துள்ள அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகிறேன். நாளைய தேவைகளையும், கவலைகளையும் நீரே பொறுப்பேற்றுக்கொள்வீர் என்ற நம்பிக்கையில், இறைவா, நன்றி கூறுகிறேன்.