திருவழிப்பாட்டு ஆண்டு A (15-06-2014)

அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் 
அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்./> அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் 
அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்./> அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் 
அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்./> அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் 
அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்./> அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் 
அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்./> அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் 
அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்./> அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் 
அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்./>


திருப்பலி முன்னுரை - 1

நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே, சிறார்களே, இளைய உள்ளங்களே, சகோதர சகோதிரியரே! மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று இறையாட்களும் இணைந்து ஒரே கடவுளாக செயல்படும் மறைபொருளுக்கு திருச்சபை இன்று விழா கொண்டாடுகிறது. இறைத்தந்தையின் மீட்புத்திட்டம் மண்ணுலகில் நிறைவேறுமாறு தூய ஆவியின் வல்லமையால் இறைமகன் மனிதரானார் என்ற உண்மையே கடவுளை முழுமையாக வெளிப்படுத்துகிறது. தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் மூவொரு இறைவனின் சாட்சிகளாக வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை - 2

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.! அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம் உயிரைச் சாவினின்று காக்கின்றவரும், பஞ்சத்திலும் நம்மை வாழ் விக்கின்றவருமான நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். மூவொரு கடவுளின் பிரசன்னம்: ஒற்றுமைக்கும், உறவுக்கும், ஒருமைப்பாட்டிற்கும், ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது.

ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு அவருடைய நெறிமுறைகளைப் பின்பற்றுவோர் பெறும் ஆசீர்வாதங்களைப் பற்றி இன்றைய இறைவார்த்தைகள் நம்மோடு பேசுகின்றன. ஆண்டவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். ஆண்டவர் தமக்கு அஞ்சி நடப்போரை கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார் என்பதே அவ் ஆசீர்வாதங்களாகும். எனவே நாம் கடவுளின் ஆவியால் இயக்கப்படுபவர்களாய் இருந்து நம் முன்மாதிரிகையான வாழ்வால் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்க உறுதி கொண்டவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34: 4b-6, 8-9

அந்நாள்களில் ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி மோசே அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச் சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார். ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, `ஆண்டவர்' என்ற பெயரை அறிவித்தார். அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், ``ஆண்டவர்! ஆண்டவர்; இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்'' என அறிவித்தார். உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, ``என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
தானி (இ) 1: 29. 30,31. 32,33

29ய எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; 29உ மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி

30 உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; 31 கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

32 உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக; 33 உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-13

சகோதரர் சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார். தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுகஅல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-18

அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:


நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.!

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

அப்பா, தந்தையே இறைவா,

உமது பிள்ளைகளாகிய இறைமக்களின் மேய்ப்பர்களாக விளங்கும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழவும், மக்களை உமக்கு உகந்தவர்களாக உருவாக்கவும் அருள் புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

விண்ணக தந்தையே இறைவா,

இம்மண்ணகத்தில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும் நீதி யிலும் ஒற்றுமையிலும் வாழவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உமது வார்த்தையால் எம்மைக் குணப்படுத்தும் தந்தையே இறைவா!

பல்வேறு நோய்களினாலும், கவலைகளினாலும் பாதிக்கப்பட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்கள் உடல் நலமும், மனநலமும் பெற்று மகிழ்ந்திட அருள்கூர்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நீதியை நிலைநாட்டும் இறைவா,

இன்றைய குடும்பங்களில் உண்மையான அன்பு நிலவிடவும், உறவுகளைச் சிதைக்கின்ற சுயநலம், பொருளாசை இவை மறைந்து தியாக மனம் உருவாகிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆன்மாக்களின் ஆயரும், கண்காணிப்பாளருமான தந்தையே இறைவா!

எமது இளைஞர், இளம் பெண்களை நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் நெறிகெட்ட தலைமுறையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொண்டு உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது பிள்ளைகள் என்று சொல்லிக் கொண்டு பிளவுபட்டுக் கிடக்கும் அத்தனை சபைகளும் ஒன்று சேர்ந்து உமது சாட்சிகளாய் மாறும் ஒரு உன்னத நிலையை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இன்றைய சிந்தனை

''இயேசு, ''தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்' என்றார்'' (யோவான் 3:16)

தந்தை, மகன், தூய ஆவியார் - இவர்களே மூவொரு இறைவன் படைக்கும் ஆற்றலோடு தொடக்கத்தில் நீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தவர். வார்த்தை வடிவம் பெறுவதற்கு முன்பாகவே உருவமற்று தந்தையாக இருந்தவர். ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கியவர். மனுக்குலம் பிறப்பதற்கு முன்னதாகவே இருக்கின்றவராக இருக்கின்றவர். இவர் ஒருவரே கடவுள். இவரே மனிதனாக உலகிற்கு வந்தவர்.

மகன். உலகிற்கு ஒளி, வழி, வாழ்வு, உண்மைக் கடவுளுக்கு சான்று பகர வந்தவர். உலகின் மீட்பர். பாவங்களையும் மன்னிக்கிறவர். உலகம் உய்வதற்காகத் தன்னுடல் இரத்தம் இவற்றின் மறைபெருளாக நற்கருணை என்னும் அருளடையாளம் வழங்கி எந்நாளும் உங்களோடு இருப்பேன். என்று உறுதி கூறி இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து விண்ணேற்றம் அடைந்தவர்.

எந்நாளும் நம்மோடு தங்கியிருந்து வழிநடத்த தூய ஆவியாம் இறைவனை உலகிற்கு அனுப்பியவர் தந்தையாம் கடவுள். இவ்வாறு மூவொரு இறைவனாக மனிதனைப் படைத்து, மீட்டு, என்றென்றும் வாழும் நிலைவாழ்வை மனிதனுக்குக் கொடையாக மட்டுமல்ல தன் இயல்பாகவே இருக்கிறார். செயல்படுகிறார். நம்பிக்கை கொண்டோர் அனைவரும் வாழ்வு பெறுவர்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கின்ற உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.