இன்று பொதுக்காலம் 18 ஆம் ஞாயிறு.‏

திருவழிப்பாட்டு ஆண்டு B (02-08-2015)

இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மை யில் இவரே  என்றார்கள்./> இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மை யில் இவரே  என்றார்கள்./> சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்./> கடவுள் அன்பாய் இருக்கிறார்/> தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்./> இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மை யில் இவரே  என்றார்கள்./> இது எனது உடல்: இது எனது உடன்படிக்கையின் இரத்தம்./> நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்/> சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்/>


திருப்பலி முன்னுரை -1

இறைத்திருமகன் இயேசுவின் அன்பில் அவருடைய புனித நாளாகிய இன்று ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்தைக் கூறிக்கொள்கிறேன். திருமகன் இயேசு இன்று தன்னுடைய மானுட வருகையை இறைத்திருவுளப்படி சிறந்த ஈகம் நிறைந்த ஒரு செயல்பாடாயிருக்கிறது என்பதை நமக்கு விளக்குகிறார். படைப்பின் தொடக்கத்திலிருந்தே இறைவனால் வழங்கப்பட்ட தலைசிறந்த மீட்பின் திட்டத்தின் செயல்வடிவம்தான் அது.

இயேசுவுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு நிலைவாழ்வுக்கான உணவைத் தேட நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு செய்த அற்புதத்தால் அப்பங்களை வயிறார உண்ட மக்கள், மீண்டும் உணவைத் தேடி இயேசுவிடம் செல்கின்றனர். இயேசு அவர்களிடம், தானே வாழ்வு தரும் உணவு என்று எடுத்துரைக்கிறார். மனித உடல் எடுத்த இறைமகன் இயேசு, நற்கருணை வடிவில் தன்னையே நமக்கு உணவாகத் தருகிறார். நமது ஆன்மத் தேவைகளுக்காக நிலைவாழ்வு அளிக்கும் உணவாம் இயேசுவைத் தேடும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

திருப்பலி முன்னுரை -2

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! நம் பசியையும், தாகத்தையும் தணிக்கும் நம் இறைவனின் திருப்பெயரால் நல்வாழ்த்துக்கள் கூறி இத்திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம். இன்று பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு.

கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். என்னும் அழைப்பை இன்றைய இறைவார்த்தைகள் மூலமாக நாம் பெற்றுக்கொள்ளுகின்றோம். அத்தோடு இறைவனின் இரக்கமே என்றும் நம்மை வாழ்விக்கின்றது என்னும் உண்மையும் உணர்த்தப்படுகின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழவும்; கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொண்டு புதுப்பித்துப் பகிரும் இறைமக்களாக வாழ இத்திருப்பலியில் வரங்கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

முதல் வாசக முன்னுரை

இயேசுவுக்குரியவர்களே,

இன்றைய முதல் வாசகம், எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட இஸ்ரேல் மக்கள், நல்ல உணவுக்காக முணுமுணுத்ததை எடுத்துரைக்கிறது. மக்களின் பிதற்றலைக் கேட்ட ஆண்டவர், பாலை நிலத்தில் அவர்களுக்கு மன்னாவும் காடையும் உணவாக கிடைக்கச் செய்கிறார். மனிதர் உயிர் வாழ உணவு அளிப்பவர் கடவுளே என்ற கருத்து இங்கு தெளிவுபடுத்தப்படுவதை காண்கிறோம். நாமும் ஆண்டவர் தரும் உணவில் நிறைவு கண்டு மகிழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன்.
விடுதலைப்பயண நூலிலிருந்து வாசகம். 16: 2-4,12-14

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். "இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கிää "இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்துää எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்றனர். அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, "இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்." "இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், "மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் " என்று சொல" என்றார்." மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது. பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையானää தட்டையானää மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது."இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி "மன்னா " என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்.
திருப்பாடல்78;3-4,23-25,54

நாங்கள் கேட்டவை, நாங்கள் அறிந்தவை, எம் மூதாதையர் எமக்கு விரித்துரைத்தவை-இவற்றை உரைப்போம். வரவிருக்கும் தலைமுறைக்கு ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம்.(பல்லவி)

மேலேயுள்ள வானங்களுக்கு அவர் கட்டளையிட்டார்: விண்ணகத்தின் கதவுகளைத் திறந்துவிட்டார். அவர்கள் உண்பதற்காக மன்னாவை மழையெனப் பொழியச் செய்தார்: அவர்களுக்கு வானத்து உணவை வழங்கினார்..(பல்லவி)

வான தூதரின் உணவை மானிடர் உண்டனர்: அவர்களுக்கு வேண்டியமட்டும் உணவுப் பொருளை அவர் அனுப்பினார். அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார்(பல்லவி)...

இரண்டாம் வாசகம்

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசுவுக்குரியவர்களே,

இரண்டாம் வாசக முன்னுரை: இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், நமது தீய நடத்தையில் இருந்து விலகி வாழ அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றி, உண்மையிலும் நன்மையிலும் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவை உணவாகப் பெறும் நாம் அந்த உணவால் ஊட்டம் பெற்று, நிலைவாழ்வை உரிமையாக்கி கொள்வோம். கிறிஸ்துவின் இயல்பை அணிந்தவர்களாய் நீதியிலும் தூய்மையிலும் வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத்துக்கு செவிகொடுப்போம்.

கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள்..
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 4: 17,20 - 24

ஆதலால் நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே: பிற இனத்தாவர் வாழ்வதுபோல் இனி நீங்கள் வாழக்கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள். ஆனால் நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல. உண்மையில் நீங்கள் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதும் கற்றறிந்ததும் அவரிடமுள்ள உண்மைக்கேற்பவே இருந்தது. எனவேää உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றிää தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் .அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-35

இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏற இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்? " என்ற கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார் " என்றார். அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? " என்று கேட்டார்கள். "இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்""என்றார். அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! "அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் " என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! " என்றனர். இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல: வானிலிருந்து உங்களுக்கு உண்மையான அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது " என்றார். அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் " என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது: என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


ஆண்டவரின் புகழ்மிகு, வலிமைமிகு செயல்களையும் அவர் ஆற்றிய வியத்தகு செயல்களையும் எடுத்துரைப்போம்..

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.

எம் திருச்சபை வழிநடத்தும் அனைவருக்காக:

வாழ்வு தருபவராம் இறைவா, உமது அருள் நலன்களால் ஊட்டம் பெற்று, திருச்சபை செழித்தோங்க உழைக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறைமக்களின் ஆன்மத் தேவைகளை நிறைவேற்றுபவர்களாய் செயல்பட வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நாட்டிற்காக:

உம் படைப்புகளைப் பலுகிப் பெருகச் செய்யும் எம் இறைவா! எமது நாட்டு அரசியல் அவலங்களால் பசி, பட்டினி, நோய்கள், குடிபோதை என்று பாதிக்கப்பட்டு அவதியுறும் எம் ஏழை ஏளிய மக்களை பாரும். அவர்கள் வாழ்க்கை நிலை மேலோங்கி எல்லாரும் நலம் வாழ பகிர்ந்தளிக்கு நல்ல மனதினை தரவேண்டுமென்றும், உம்முடைய மக்களாகிய நாங்களும் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழவும், கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொண்டு புதுப்பித்துப் பகிரும் இறைமக்களாக வாழவும் வேண்டிய நன் மனதை எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மக்களுக்காக:

எல்லாம் வல்லவரான தந்தையே இறைவா! உம்முடைய மக்களாகிய நாங்களும் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழவும். முழு மனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள வேண்டிய நன்மனதை எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனித நேயம் மண்ணில் மலர்ந்திட:

பண்பாளரே எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்து பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப்போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திடவும், உலக நாடுகளிலே உணவின்றியும், போதிய மருத்துவ வசதியின்றியும் அல்லலுறும் அனைவரையும் காத்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இளைய சமுதாயத்திற்காக :

எங்கள் அன்பு தந்தையே இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம் பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும், உலகெங்கும் வன்முறை, தீவிரவாதம், உள்நாட்டு கலவரம், பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் உமது உதவியை நாடவும், தீமையை வெறுத்து, நன்மையையும், நீதியையும் தேடி நல்ல வாழ்வைப் பெற்றுக்கொள்ளவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

முதியோர்களுக்காக :

அன்பின் இறைவா! உம் மக்கள் இன்றைய சூழலில் வயது முதிர்ந்தவர்களை பேணி காக்கும் நிலைமாறி, முதியோர் இல்லங்கள் பெறுகிவரும் நிலையில் அவர்களுக்கு நீர் தந்தையாகவும், தாயாகவும் நின்று, தாங்கள் கடந்து வந்த பாதையைக் குறித்து அவர்கள் துன்புறும் வேளையில் அவர்களுக்கு அன்பினை பொழிந்து அரவணைத்தும் நல் ஆயனாக இருந்து வழி நடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு அவர்களிடம், 'வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்றார்'' (யோவான் 6:35)

யோவான் நற்செய்தி இயேசுவை ''ஒளி'', ''உணவு'', ''வழி'', ''வாழ்வு'', ''உண்மை'' போன்ற பல உருவகங்களைப் பயன்படுத்தி நமக்கு அறிவிக்கிறது. தந்தையாம் கடவுளை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். தந்தையிடம் அவர் நம்மை இட்டுச் செல்கிறார். எனவே இயேசு மக்களை நோக்கி, ''என்னிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறுகிறார். ''இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுதல்'' என்னும் சொற்றொடர் யோவான் நற்செய்தியில் 34 தடவை வருகிறது. ''நம்பிக்கை'' என்னும் சொல் பழைய கத்தோலிக்க வழக்கில் ''விசுவாசம்'' என அழைக்கப்பட்டது. இன்றைய சொல் வழக்கில் ''நம்பிக்கை'' என்பது சில வேளைகளில் பகுத்தறிவால் நிரூயஅp;பிக்க இயலாத, ஆனால் மக்களால் பொதுவாக ஏற்கப்பட்ட ஒரு கருத்தைக் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக, இராகு காலத்தில் திருமணம் நிகழ்வது முறையல்ல என்னும் ''நம்பிக்கை''யைக் காட்டலாம். கடவுளின் பார்வையில் எந்தக் காலமும் நல்ல காலம் தான். எனவே இராகு காலம் என்று கூறி ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கெட்ட நேரமாகக் கருதுவது ''மூட நம்பிக்கை'' என்போம். சிலர் சமய நம்பிக்கை என்றாலே மூட நம்பிக்கை என நினைக்கிறார்கள். ஆனால் மனித அறிவுக்கு எட்டாத பரம்பொருள் உண்டு எனவும் கடவுள் என நாம் அழைக்கும் அவர் நம்மை அன்போடும் பாசத்தோடும் அரவணைக்கின்ற தந்தையாக, தாயாக விளங்குகிறார் எனவும், அவர் நம்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தம் ஒரே மகனை நம் மீட்பராக நம்மிடையே அனுப்பினார் எனவும் கிறிஸ்தவ சமயம் போதிக்கிறது. இதை நாம் ''கிறிஸ்தவ நம்பிக்கை'' என்கிறோம். இயேசு கிறிஸ்து நமக்குக் கடவுளைப் பற்றிக் கற்றுத் தந்துள்ளார். எனவே அந்த இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

இயேசு ஐயாயிரம் மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளித்ததைக் கண்ட மக்கள் அவரைத் தேடி வருகிறார்கள். மேலும் தங்களுக்கு உணவு கிடைக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் இயேசு அவர்களுடைய சிந்தனையை ஆழப்படுத்துகிறார். அவர்கள் தம் அகக்கண்களைத் திறந்து கடவுளின் செயலைக் கண்டுகொள்ள அவர்களை அழைக்கிறார். உடல் சார்ந்த பசியைப் போக்குகின்ற அப்பமல்ல, ஆனால் மனித வாழ்வின் ஏக்கங்களையெல்லாம் நிறைவுசெய்கின்ற ''அப்பத்தை'' இயேசு வாக்களிக்கிறார். அந்த அப்பம் இயேசுவே. மக்கள் இயேசுவை நம்ப வேண்டும். அதாவது, அவரை முழு இதயத்தோடும் உள்ளத்தோடும் ''பற்றிக்கொள்ள'' வேண்டும். அப்போது அவர்கள் வேறு இடங்களில் அப்பம் தேடிப் போக மாட்டார்கள். மாறாக, இயேசு வழங்குகின்ற போதனையும் அவரோடு இணைந்திருக்கின்ற அன்புப் பிணைப்பும் அவர்களுக்கு ''அன்றாட அப்பமாக'' அமையும். பற்றற்ற இறைவனின் பற்றைப் பற்ற வேண்டும் என்றார் வள்ளுவர் (குறள் 350). கிறிஸ்தவப் பார்வையில் இறைவன் மனிதர் மட்டில் மிகவும் பற்றுடையவர். மனிதரை வேறுபடுத்தி, ஒருதலைச் சார்பாகச் செயல்படாமல் அனைவரையும் தம் அன்புப் பிணைப்பால் தழுவுகின்றவர். எனவே இறைவனிடம் நம்பிக்கை கொள்வது நாம் அவரே நமது கதி எனக் கொண்டு அவருடைய வழிநடத்தலுக்கு நம்மை முழுமையாகக் கையளித்தலில் அடங்கும். இத்தகைய நம்பிக்கையைத் தான் இயேசு மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். அப்போது அவரே நம் ஆன்ம பசியைப் போக்கி, நம் வாழ்வின் ஏக்கங்களைத் தணித்திடுவார். நமக்கு நிலைவாழ்வில் பங்களிப்பார்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவை நாங்கள் எந்நாளும் நாடிச் சென்று அவர்தரும் உணவால் திடம் பெற்று வாழ்ந்திட அருள்தாரும்.